ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய 5-ம் வகுப்பு மாணவர் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தி வசூல்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய 5-ம் வகுப்பு மாணவர் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தி வசூல் செய்தனர்.
ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிய 5-ம் வகுப்பு மாணவர் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தி வசூல்
Published on

பூந்தமல்லி,

திருவேற்காட்டை சேர்ந்தவர் திருவருள்(வயது 10). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே சாக்சபோன் இசைக்கருவி வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன்னைப்போல் இசையில் ஆர்வம் கொண்ட தனது நண்பர்களை ஒன்றிணைத்து பல்வேறு கச்சேரிகளை நடத்தி வந்தார்.

புதிதாக விலை உயர்ந்த சாக்சபோன் வாங்க சிறுக, சிறுக ரூ.30 ஆயிரம் சேமித்து வைத்து இருந்தார். ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று கருதிய மாணவன் திருவருள், தான் சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக கொடுக்க முன்வந்தார்.

அந்த தொகை சிறியதாக இருந்ததால், தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இசை கச்சேரியை நடத்தினார். அதில் ரூ.20 ஆயிரம் வசூலானது. இதையடுத்து தனது சேமிப்பு பணம் ரூ.30 ஆயிரம், நண்பர்களுடன் கச்சேரியில் வசூலான ரூ.20 என மொத்தம் ரூ.50 ஆயிரத்தை புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து அனுப்பி வைத்தார். மாணவர்களின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com