கயத்தாறு சிவன் கோவிலில் ராஜகோபுரத்தை புதுப்பிக்க ரூ.97.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கயத்தாறு சிவன் கோவிலில் ராஜகோபுரத்தை புதுப்பிக்க ரூ.97.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கயத்தாறு சிவன் கோவிலில் ராஜகோபுரத்தை புதுப்பிக்க ரூ.97.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
Published on

கயத்தாறு,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.

கயத்தாறு முத்துக்கிருஷ்னேஸ்வரர் கோவில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவிலில் கற்களால் ஆன மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. 2 இடங்களில் நாழிக்கிணறு மற்றும் 2 பள்ளி அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் அனைத்து தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சிவராத்திரி, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருவாதாரன தேரோட்டம், பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ரூ.97.50 லட்சம் ஒதுக்கீடு

கோவிலில் பல்வேறு பகுதியில் சிதிலமடைந்து குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் பழுதடைந்து உள்ளது. இதனை பழுதுபார்த்து புதுப்பிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்த கோரிக்கையானது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை மூலம் இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரத்தை பழுதுபார்த்து புதுப்பிக்க ரூ.97.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். இதற்காக முதல்-அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்களின் சார்பாகவும், பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com