பீடி தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.1½ லட்சம் மானியம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பீடி தொழிலாளர்கள் வீடுகட்டுவதற்கு ரூ.1½ லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
பீடி தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.1½ லட்சம் மானியம்
Published on

வேலூர்,

வீடு இல்லாத பீடி தொழிலாளர்கள் சொந்தமாக வீடுகட்டிக்கொள்ள மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் 20172018ம் ஆண்டில் 8 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் 3 கட்டங்களாக அதாவது முதல் கட்டமாக ரூ.37,500, இரண்டாவது கட்டமாக ரூ.90 ஆயிரம், 3வது கட்டமாக ரூ.22,500 வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் பீடி தொழிலாளர் நல மருந்தகத்தின் மருத்துவ அதிகாரி கே.உஷாராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு தொழிலாளர் நல அமைச்சகத்தின் பீடி தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மானியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் பீடி தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்கள் அல்லது அவர்களுடைய கணவர் பெயரில் உள்ள மனையில் வீடுகட்டிக்கொள்ள மானியம் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பம் பெறுவதற்கும், இந்த திட்டம் குறித்து தெரிந்துகொள்ளவும் அருகில் உள்ள பீடி தொழிலாளர் நல மருந்தகத்தினை அணுகலாம். மேலும் வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் அமைந்துள்ள வீட்டு வசதிவாரியத்தில் உள்ள பீடி தொழிலாளர் நல மருந்தக மருத்துவ அதிகாரியை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com