பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
Published on

அரவக்குறிச்சி,

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு வருவது வழக்கம். இந்த பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை நடைபெறும்.

அதேபோல இந்தாண்டும் ஆட்டுச்சந்தை நேற்று நடைபெற்றது. இதையொட்டி கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையே வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

விற்பனை அமோகம்

இவற்றை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், இறைச்சிக்கடைக்காரர்களும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்தது. இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விலைபோனது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டுச்சந்தை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com