கதண்டுகள் கடித்து தொழிலாளர்கள் 30 பேர் காயம்

கதண்டுகள் கடித்து தொழிலாளர்கள் 30 பேர் காயம்
கதண்டுகள் கடித்து தொழிலாளர்கள் 30 பேர் காயம்
Published on

துறையூர், டிச.29-
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சிக்கத்தம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஏரிக்கரையில் உள்ள மரங்களில் குரங்குகள் தாவித்தாவி விளையாடிக்கொண்டிருந்தன. இந்த நிலையில் அங்கு வந்த நாய்கள் குரங்குகளை விரட்ட முயற்சி செய்தன. இதனால் பயத்தில் குரங்குகள் மிரண்டு ஓடியதில் அங்கிருந்த கதண்டுகளின் கூட்டை கலைத்தன. இதைத்தெடர்ந்து அந்த கதண்டுகள் அங்கு பணியாற்றி கொண்டு இருந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கடித்தன.
இதில் சுசிலா (55), சாந்தி (40), பார்வதி (65), சரவணன் (35), கிருஷ்ணமூர்த்தி (65), மல்லிகா (55) உள்பட 30 பேரின் கை, கால், முகம் என பல இடங்களில் காயம் ஏற்பட்டு வீங்கியது. இதில் சிலர் மயக்கம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் துறையூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com