பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை முறையாக செயல்படுத்த வேண்டும்; பொது பள்ளிகளுக்கான மாநில மேடை வேண்டுகோள்

பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகளை முறையாக செயல்படுத்த வேண்டும்; பொது பள்ளிகளுக்கான மாநில மேடை வேண்டுகோள்
Published on

பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் வரவேற்கத்தக்கது. அதேவேளையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கலை மற்றும் கைவினை ஆசிரியர், ஆசிரியரல்லாத அலுவலர்கள் நியமனம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.பள்ளிகளில் கழிப்பறை கட்டுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில் கழிப்பறையை சுத்தம் செய்ய தனி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. பள்ளிகளில் நிரந்தர காவலாளி நியமனம் தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால் சுயநிதி படிப்புகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்வது சவாலாக உள்ளது. இதுதொடர்பான எந்த அறிவிப்பும் மானியக்கோரிக்கையின் போது தெரிவிக்கப்படவில்லை.கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை முறையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com