சென்னை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு
Published on

சென்னை,

சென்னை மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி வாகனங்கள் மீதான ஆய்வுப்பணி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு), மாவட்ட கல்வி அதிகாரி (மேற்கு), போக்கு வரத்து உதவி கமிஷனர் (சேத்துப்பட்டு) மற்றும் மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர்கள் பங்கேற்று, பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களை இயக்கி பார்த்தும் ஆய்வு செய்தனர். மொத்தம் பங்கேற்ற 52 வாகனங்களில், 5 வாகனங்களில் மட்டும் சிறு குறைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அந்த குறைபாடுகளை சரிசெய்ய காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

ஆய்வை தொடர்ந்து, தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அவசர கால முதலுதவி குறித்து அலர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com