பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்; கலெக்டர் தகவல்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி. சேவை வழங்கப்பட்டு வருகிறது.
பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்; கலெக்டர் தகவல்
Published on

திருவண்ணாமலை,

ஏழை, எளிய மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு மாதம் ரூ.154 என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. சேவை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செட்டாப் பாக்ஸ்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளவரையில் மட்டுமே சந்தாதாரர்கள் இந்த பெட்டியை தங்களிடம் வைத்திருக்க உரிமை உண்டு. பயன்படுத்தாத நிலையில் வைத்து இருந்தாலும், வேறு பகுதிக்கு வீடு மாறிச் செல்லும் போதும் ரூ.1,725 பெறுமானமுள்ள இந்த செட்டாப் பாக்ஸ்களை சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com