

திருத்தணி,
திருத்தணியை அடுத்த வள்ளிமாபுரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறி திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதை அறிந்த திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜராஜன், கார்த்திகேயன், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்றால் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா.