வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க சிறப்பு முகாம் - 1,665 மையங்களில் நடந்தது

வேலூர் மாவட்டத்தில் 1,665 மையங்களில் வாக்களர் பட்டியலில் பெயர்சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க சிறப்பு முகாம் - 1,665 மையங்களில் நடந்தது
Published on

வேலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் 1,665 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது. பெயர்சேர்க்காமல் விடுபட்ட வாக்காளர்கள், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பெயரை சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.

அதேபோன்று பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்யவும் படிவங்களை நிரப்பி கொடுத்தனர். கலெக்டர் சண்முகசுந்தரம் சில வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11, 12 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் நடக்கிறது.

சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்த இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com