சென்னையில் இருந்து வங்காளதேசத்துக்கு சிறப்பு விமானம் - 166 பேருடன் புறப்பட்டு சென்றது

சென்னையில் இருந்து வங்காளதேசத்துக்கு சிறப்பு விமானம் 166 பேருடன் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து வங்காளதேசத்துக்கு சிறப்பு விமானம் - 166 பேருடன் புறப்பட்டு சென்றது
Published on

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பன்னாட்டு, உள்நாட்டு விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் சிகிச்சைக்காக இந்தியா வந்து தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் தவித்தவர்கள் மட்டும் சிறப்பு விமானங்கள் மூலம் மத்திய அரசின் அனுமதியுடன் அவர்களது நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அதன்படி சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை திரும்ப அழைத்து செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிகிச்சை பெற தங்கியிருந்த வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர்களுக்காக சென்னையில் இருந்து வங்காளதேசம் தலைநகர் டாக்காவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் 60 பெண்கள் உள்பட 166 பேர் புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com