

செஞ்சி,
தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் விழுப்புரம் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கல்லூரியின் செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேச்சு போட்டியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன், கல்லூரியின் தாளாளர் வக்கீல் ரங்கபூபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குலாம் மொய்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் கல்லூரியின் முதல்வர் செந்தில் குமார் நன்றியுரையாற்றினார்.