இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெற்று இருந்தால் போரே நடந்திருக்காது தஞ்சையில், சீமான் பேச்சு

இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெற்று இருந்தால் அங்கு போரே நடந்து இருக்காது என்று தஞ்சையில், சீமான் கூறினார்.
இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெற்று இருந்தால் போரே நடந்திருக்காது தஞ்சையில், சீமான் பேச்சு
Published on

தஞ்சாவூர்,

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நாட்டில் இருந்து பிரிந்து இன்னொரு நாடு உருவாவது பிரிவினை ஆகாது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களுக்கு இந்தியா துணை நின்றது தவறானது. விடுலைப்புலிகளை ஒழிப்பது தான் இந்திய பாதுகாப்புக்கு நல்லது என்று செயல்பட்ட இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது.

தமிழ்ஈழம் மலர்ந்து இருந்தால் தந்தையின் கையை பிடித்து கொண்டு நடக்கும் குழந்தையை போல் இந்தியாவுடன் இணக்கமாக இருந்திருக்கும். இந்திய ராணுவத்தில் தமிழர்கள், சீக்கியர்கள் என அனைத்து மாநிலத்தினரும் இடம் பெற முடியும். ஆனால் இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம் பெற முடியாது.

அப்படி இருக்கும்போது அந்த மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். 70 சதவீத சிங்களர்கள், 30 சதவீத தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இடம் பெற்று இருந்தால் போராட்டமே நடந்து இருக்காது. இழந்துவிட்ட உரிமையை கேட்டு பெற முடியாது. போராடித்தான் பெற முடியும். திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் அரசியல் கூட்டணி கிடையாது. ஒரு காலத்தில் எங்கள் வலிமையை உலகம் புரிந்து கொள்ளும். என் மக்கள் நிம்மதியாக வாழாமல் சிங்களர்களால் நிம்மதியாக வாழ முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கஜா புயலால் ஏற்பட்ட மாபெரும் பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதித்த தென்னை, மா, பலா, வாழை மரங்கள், பலியான கால்நடைகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் குகன்குமார், நிர்வாகிகள் திலீபன், அறிவுச்செல்வன், ஹீமாயூன் கபீர், சாகுல் அமீது, செந்தில்நாதன், அமுதா நம்பி, துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com