

மறியல்
பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியத்தை சேர்ந்த அருமந்தை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊராட்சியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்தும் தேசிய ஊரக வேலை செய்யும் பெண்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன், சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.