தெருவிளக்கு மின்கம்பத்தில் பல்பு மாட்டப்படுமா

தெருவிளக்கு மின்கம்பத்தில் பல்பு மாட்டப்படுமா? என எதிர்பார்க்க படுகிறது.
தெருவிளக்கு மின்கம்பத்தில் பல்பு மாட்டப்படுமா
Published on

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி, செல்லாண்டி புரத்தை அடுத்த மதுக்கரையில்பஸ் நிறுத்தம் உள்ளது. கரூர் மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் பாலப்பட்டி, தேவச்சி கவுண்டனூர், பொரணி, பொம்மனத்துப்பட்டி, அய்யம்பாளையம், குறலப்பன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வந்து பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். அப்படி வரும் பஸ் பயணிகளின் வசதிக்காக இந்த பஸ் நிறுத்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு, தெருவிளக்கு வசதியும் செய்யப்பட்டது. இந்த தெருவிளக்கு மின்கம்பத்தில் கடந்த சில நாட்களாக பல்பு மாட்டப்பட்டிருந்த கம்பி மட்டுமே உள்ளது. பல்பை காணவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருட்டாக உள்ளது. இந்த இருட்டை பயன்படுத்தி மது பிரியர்கள் இங்கு வந்து பயணியர் நிழற்குடை மற்றும் சுற்றுப்பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com