

சென்னை,
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போலீசார் தடுப்பு வேலி அமைத்து கோட்டையை முற்றுகையிட முயற்சித்த பால் உற்பத்தியாளர்கள் 300 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதையடுத்து அரசு தரப்பில் இருந்து பால் உற்பத்தியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தனர்.
அதன்படி, பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஏ.எம்.முனுசாமி, பொதுச்செயலாளர் கே.முகமது அலி உள்பட 4 பேரிடம், பால்வளத்துறை செயலாளர் கோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.