கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம், கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது
Published on

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த மீனவர்களான மோகன், சக்திவேல், ஹரி, கர்ணன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகு மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அவர்கள் சென்ற படகு கடல் அலையில் சிக்கி கவிழ்ந்ததாக தெரிகிறது. இதில் சக்திவேல், ஹரி, கர்ணன் ஆகிய 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி நீந்தி கரை ஒதுங்கினார்கள்.

ஆனால் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த பக்கிரி என்பவரது மகன் மோகன் (வயது 22) மட்டும் அலையில் சிக்கி மாயமானார். கடலோர போலீசார் அவரை தேடி வந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பிள்ளைசாவடி என்ற இடத்தில் மோகனின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிந்தது.

தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய உடலை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com