கடையம் யூனியன் பகுதியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு

கடையம் யூனியன் பகுதிகளில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கடையம் யூனியன் பகுதியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு
Published on

கடையம்,

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று கடையம் யூனியன் பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். கடையம் யூனியன் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், தெற்கு மடத்தூர் ஊராட்சி ஊருணி, மணல்காட்டானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், லெட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்துணவு மையம், மேலாம்பூர் அங்கன்வாடி மையம், பூவன்குறிச்சியில் தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

லெட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சுற்றுப்புற சுகாதாரம் குறித்து கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் எடுத்துரைத்தார். பின்னர் ஒரு மாணவியிடம், கலெக்டர் ஆங்கிலத்தில் உரையாடினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்துணவு நியூட்டன், கடையம் யூனியன் ஆணையாளர் முருகையா, கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல், பொறியாளர்கள் சுப்பிரமணியன், ஜான்சுகிர்தராஜ், ஓவர்சீயர் செல்வம், ஜெயலட்சுமி, ஆண்டாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com