நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Published on

நாமக்கல்:

பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல்லில் சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி என்கிற சசிகலா (வயது 35). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் நகராட்சி 13-வது வார்டில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி என்பவருக்கு ஆதரவாக அந்த பகுதியில் வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில் நேற்று காலை மொபட்டில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பேபி திடீரென பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றினர். பின்னர் 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தேர்தல் விரோதம்

முன்னதாக அவர் தேர்தல் முன்விரோதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, தன் மீது பொய்யான புகார்களை போலீசில் கொடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். தீக்குளிக்க முயன்ற பேபி என்கிற சசிகலா நாமக்கல் ஊர்க்காவல் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com