நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - ஜி.கே.வாசன் பிரசாரம்

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - ஜி.கே.வாசன் பிரசாரம்
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து ஊத்தங்கரை முனியப்பன் கோவில் அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது ஜி.கே.வாசன் பேசியதாவது:-

மக்கள் விரும்பும் கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், 60 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். நாட்டை வளமானதாகவும், வளர்ச்சியுள்ள நாடாகவும் மாற்றிட மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்திட வேண்டும். மத்திய - மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் நாடு வளர்ச்சி பெற முடியும்.

மத்தியில் பிரதமர் மோடியும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியும் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com