சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் தமிழும், தமிழ் மருத்துவமும் விழிப்புணர்வு விழா; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், செந்தமிழ் சொற்பிறப்பியல், அகரமுதலித்திட்ட இயக்ககமும் இணைந்து, தமிழும் தமிழ் மருத்துவமும் என்ற விழிப்புணர்வு விழா மற்றும் சித்தர் திருநாள் விழாவை நேற்று நடத்தியது.
சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் தமிழும், தமிழ் மருத்துவமும் விழிப்புணர்வு விழா; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு
Published on

இதில் அமைச்சர் பாண்டியராஜன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் தங்க காமராசு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர், மீனாகுமாரி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் உட்படபலர் கலந்து கொண்டனர்.

அப்போது, இரு நிறுவனங்களும் இணைந்து, தனித்தமிழ் சொற்களுடன், தமிழ் மருத்துவ சொற்களை இணைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

அதேபோல் திருவேற்காட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளரும், அ.தி. மு.க.வின் அடுத்த முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமிதான். தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன், தி.மு.க. பற்றி விமர்சித்து பேசாதது ஏன்? என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com