தமிழக சட்டமன்ற தேர்தல் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

தமிழக சட்டமன்ற தேர்தல் துண்டு பிரசுரங்கள் வழங்கி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
Published on

திருவள்ளூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று வருகிற சட்டமன்ற தேர்தலில் தவறாமல் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை கடை வளாகத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது தங்களது ஜனநாயக கடமை என எடுத்து கூறி அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com