

சென்னை,
இந்தியாவுக்கு அகதிகளாக வரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மத்திய அரசு அடைக்கலம் தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
அப்போது, மியான்மரில் அமைதி திரும்பும்வரை ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவில் அகதிகளாக இருப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.