வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறிய டெலஸ்கோப்

உலக பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. சீனா முதன் முறையாக விமானம், கப்பல் ஆகியவற்றின் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் மிகச் சிறிய மூன்று செயற்கைக் கோள்களை 2 வருடங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தியது.
வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறிய டெலஸ்கோப்
Published on

இது விண்வெளி ஆராய்ச்சியில் அழுத்தமாக கால் பதிக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் தொடக்கம் எனலாம்.

பல்வேறு சிறப்புகளையும் பெற்று ஜாம்பவானாக திகழும் சீனா, விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கென தனி முத்திரையை இதுவரை பதிக்கவில்லை. தற்போது ராணுவத்துக்கு அடுத்தபடியாக விண்வெளிஆராய்ச்சிக்கு அதிக நிதியை சீனா ஒதுக்கி வருகிறது. அமெரிக்கா போன்று விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய இடத்தை பிடிக்க சீனா களம் இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. 2022-ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. பூமியில் இருந்து அதிக தூரத்துக்கு சமிக்கைகளை அனுப்பவும், பெறவும் உலகின் மிகப்பெரிய ஆண்டனாவை சீனா கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டனாவின் விட்டம் சுமார் 30 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக இருக்கும். இதன் எடை 10 ஆயிரம் டன்கள் ஆகும். இதன் மூலம் பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் உள்ள கிரகங்களுக்கு சமிக்கைகளை அனுப்பவும், பெறவும் முடியும். இதில் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் எதிரொலிக்கும் கண்ணாடிகள் உள்ளன. இதன் மொத்த பரப்பு சுமார் 1.6 கிலோ மீட்டர் ஆகும். இந்த டெலஸ்கோப் சீனாவில் குய்ஷூ மாகாணத்தில் நிறுவப்படுகிறது.

இந்த ராட்சத டெலஸ்கோப்பின் ரெப்லக்டர் மட்டும்500 மீட்டர் அகலமானதாக வடிவமைக்கப்படுகிறது. அந்த டெலஸ்கோப்பில் 4,450 தகடுகள் பதிக்கப்படுகிறது.ஒவ்வொன்றும் 11 மீட்டர் நீளம் இருக்கும். இது தயாரித்து முடிக்கப்பட்டால் உலகத்திலேயே மிகப்பெரிய டெலஸ்கோப் என்ற பெருமையை சீனா பெற்றுவிடும். தற்போது பெர்டோரிகோவில் ஆர்சிபோ வானிலை மையத்தில் உள்ள ரேடியோ டெலஸ்கோப் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. இது300 மீட்டர் அகல ரெப்லக்டருடன் உள்ளது. இதன் மூலம் மின்னலின் போது அண்டவெளியில் ஏற்படும் சத்தத்தின் அளவை கணக்கிட முடியும். மேலும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் நடமாட்டம் பூமியில் அவ்வப்போது தென்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ரேடியோ டெலஸ்கோப் மூலமாக வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை அறியலாம் எனவும் சீனா திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com