தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
Published on

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் 7-வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தாயார்களுடன் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவில் அரவிந்தலோசனர் சுவாமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் தேர் கமிட்டி தலைவர் கண்ணன், பேராசிரியர் ஆழ்வான், சடகோபன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு நடக்கிறது. 5-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது.

9-ம் நாளான 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாளான 30-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில் தக்கார் விசுவநாத் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com