காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது ஜி.கே.வாசன் பேச்சு

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது ஜி.கே.வாசன் பேச்சு
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்ட த.மா.கா. சார்பில் முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆறுமுகநேரியில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் விஜயசீலன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம், ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம்.பி. கே.டி.கோசல்ராம் மக்கள் தொண்டாற்றுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். அவர் தனது தொகுதிக்காக மட்டும் அல்ல, தமிழகத்துக்காக உழைத்தவர். அவர் முயற்சியால் தான் மணிமுத்தாறு அணை வந்தது. தமிழகத்தில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் ஆகிய பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வைப்பது போல் நாடகமாடுகிறது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த ஆலையை மூடுவது குறித்து ஆய்வு செய்து மக்களுக்காக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய, மாநில அரசுகள் கபட நாடகம் ஆடுகின்றன. இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் தான்.

தமிழகத்தில் இனி தனி ஆட்சி அமையாது. கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த சூழ்நிலை வரும் போது த.மா.கா. தெளிவான கூட்டணியில் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com