தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் தே.மு.தி.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் காளிராஜன் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட செயலாளர் முகமதுஅலி, தெற்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு, வடக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநகர மாவட்ட அவைத் தலைவர் சிவனேசன், பொருளாளர் செங்குட்டுவன், மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், பகுதி செயலாளர் லக்கி செந்தில், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வள்ளி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், பேரூராட்சி செயலாளர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தமிழகஅரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com