மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளதாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு - டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
Published on

பொள்ளாச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கட்சி ரீதியாக திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற் கொண்டு உள்ளார். உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி, திப்பம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிகளில் திறந்த வேனில் நின்றவாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். அப் போது அவர் கூறிய தாவது:-

கோலார்பட்டியை சேர்ந்த ஒருவர் யாரால் கேபிள் வாரிய தலைவராக, அமைச்சராக உயர்ந்தார். அவர் மறந்து இருக்கலாம். நீங்கள் மறக்க வில்லை என்று எனக்கு தெரியும். தற்போது துரோகி களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 18 எம்.எல்.ஏ.க் களின் மீதான வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு ஆட்சி மாற்றம் வரும். தமிழகம் தலை நிமிரவும், துரோகிகளிடம் இருந்து கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்க வருகின்ற தேர்தல்களில் நீங்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்தவர். தற்போது மத்திய அரசுக்கு கை கட்டி, வாய் பொத்தி அடிமை ஆட்சியை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் போது, சட்ட மன்றத் திற்கும் தேர்தல் வரும். மீண் டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மலர குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com