தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் புராதன சின்னங்களை பார்வையிட்டனர்

புதுடெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் புராதன சின்னங்களை பார்வையிட்டனர்
Published on

பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வருகை தந்தனர்.

இவர்களை மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் பூங்கொத்து கொடுத்தும், மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய கையேடுகள் அளித்தும் வரவேற்றனர்.

அந்த குழுவினர் புகழ் பெற்ற கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். அப்போது அவர்கள் புராதன சின்னம் முன்பு நின்று குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த குழுவினருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com