கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது

கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர் களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது
Published on

பொள்ளாச்சி

கொரோனா தொற்று பாதித்து வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர் களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த மாதம் 26-ந் தேதி வரை 1,812 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப் பட்டு வந்தனர். தற்போது அது 321 ஆக குறைந்து உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குறைந்து வருகிறது

தொற்று உறுதி செய்யப்பட்டு, வேறு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிஉள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.

தினமும் அவர்களின் உடல்நிலை கண்காணித்து வருகின்றோம். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

தொற்று குறைந்தாலும் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com