ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க கோரி மனு

ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க கோரி மனு
ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க கோரி மனு
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனா முகமது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியிடம் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 18-வது வார்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள (மினி போர்) பழுதை நீக்ககோரி ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணேஷ் நகர் பகுதி மற்றும் மரக்கடை வடக்கு சந்து ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் கடந்த 3 மாதங்களாக குடி நீருக்காக மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து தரவேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகத்தால் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கும் இந்த நேரத்தில் ஒரு வார்டில் 4 ஆழ்துளை கிணறு செயல்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகளை நிர்வாகம் புரிந்து கொண்டு தண்ணீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com