சர்க்கரை ஆலையை திறக்க கோரி மங்களமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்கிவிட்டு பெரம்பலூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி மங்களமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்க்கரை ஆலையை திறக்க கோரி மங்களமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
Published on

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதி அகரம் சீகூர், அங்கனூர், குழுமூர், அத்தியூர், லெப்பைக்குடிக்காடு உள்பட பல கிராமங்களில் கரும்பு விவசாயிகள் சங்கம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை, எறையூர் என்ற பெயரில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து 2015-16, 2016-17 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்கிவிட்டு இந்த ஆண்டு அரவை பருவத்திற்கு ஆலையை திறக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்து விவசாயிகளிடம் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில், சுமார் ரூ.27 கோடி நிலுவை தொகை தர வேண்டியுள்ளது. நாங்கள் பல போராட்டங்களை நடத்தியும் நிலுவை தொகை இன்னும் தரப்படவில்லை. இந் நிலையில் தமிழக அரசின் சார்பில் இயங்கும் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம் சார்பில், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதனடிப் படையில் இன்னும் 2 மாதங் களில் விவசாயிகளின் நிலுவை தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல் பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகமும் வழங்க வேண்டும். மேலும் ஆலையின் முதன்மை பாய்லர் இன்னும் சரிசெய்யப்படவில்லை. சென்ற ஆண்டு பாய்லர் பழுது ஏற்பட்டு வெடிக்கும் நிலைக்கு சென்றது. இதனால் பல நாட்கள் ஆலை இயங்கவில்லை. வெட்டப்பட்ட கரும்புகள் காய்ந்ததால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் இந்த நிலை தொடரக்கூடாது என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com