

திருச்சி:
திருச்சி மாநகராட்சி 62-வது வார்டு பாப்பாகுறிச்சி சாலை, அருந்ததியர் தெருவில் அடிப்படை வசதிகள் கோரியும், பட்டா வழங்க கோரியும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் தமிழ்புலிகள் கட்சியினருடன் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடிந்ததும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.