அடுத்த மாதம் 21-ந்தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப்போராட்டம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு

அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
அடுத்த மாதம் 21-ந்தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப்போராட்டம் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு
Published on

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளியில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார்.இதில் ஊத்துக்குளி பகுதி தலைவர் சபரி சுப்பிரமணியம்,செயலாளர் ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்ட முடிவில் நிருபர்களிடம் நல்லசாமி கூறியதாவது:-

கள் இறக்க அனுமதி கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும். 600-க்கும் மேற்பட்ட இடங்களில் பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியது இல்லை.

எங்களது உரிமை 30 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட நிலையில் வருகிற தை மாதம் நெல் அறுவடை மட்டுமின்றி கள் அறுவடையும் நடைபெறும். பீகாரில் பூரண மதுவிலக்கின் போது கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் மதுவிலக்கின் போது கள்ளுக்கு தடை விதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com