

ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரை சேர்ந்த கோபால் என்பவரது மகன் பிரசாந்த் (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை சில மாதங்களாக காதலித்து வந்து உள்ளார். இதற்கிடையே சிறுமியை மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்று பத்ரகாளியம்மன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் ஊட்டிக்கு வந்து வீட்டில் தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்ததும், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.