போலீஸ் காவல் வழங்கப்பட்ட வாலிபரை “கழிவறையில் வழுக்கி விழாமல் பார்த்து கொள்ளுங்கள்” - இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி அறிவுரை

போலீஸ் காவல் வழங்கப்பட்ட வாலிபரை கழிவறையில் வழுக்கி விழாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
போலீஸ் காவல் வழங்கப்பட்ட வாலிபரை “கழிவறையில் வழுக்கி விழாமல் பார்த்து கொள்ளுங்கள்” - இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி அறிவுரை
Published on

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 19). பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி மாணவர் முகேஷ் அவரது நண்பரான விஜய் (21) என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் தலைமறைவாக இருந்த விஜய் செங்கல்பட்டு கோர்ட்டில் வந்து, நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் கடந்த 6-ந்தேதி சரண் அடைந்தார். விஜயை வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று விஜய் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் கோர்ட்டு 2-ல் ஆஜர்படுத்தப்பட்டடார். அவரை வருகிற 11-ந்தேதி (திங்ட்கிழமை) வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது கழிவறையில் வழுக்கி விழுந்து படுகாயம் அடையாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் என்று தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு மாஜிஸ்திரேட்டு காயத்ரிதேவி அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com