திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ பொதுமக்கள் அவதி
Published on

திருவண்ணாமலை,

இந்த நிலையில் நேற்று காலை குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் குப்பை கிடங்கில் இருந்து நச்சு புகை எழுந்தது. அந்த பகுதியே தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த புகையினால் அவலூர்பேட்டை சாலையில் குடியிருக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் மீண்டும் குப்பை கிடங்கில் தீ பிடித்து புகை மூட்டம் எழுந்தது. காற்றின் வேகத்தால் தானாக தீ பிடித்தும், அணைந்தும் வருவதால், தொடர்ந்து அந்த பகுதியில் புகை மூட்டமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com