

பெங்களூரு,
பெங்களூருவில் வாகனங்கள் திருடி வந்ததாக 3 பேரை கோனணகுண்டே போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பிரசாந்த் (வயது 19), பிரமோத் (19), அபி (22) என்பது தெரியவந்தது. இவர்கள் கோனணகுண்டே, புட்டேனஹள்ளி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடி வந்தது தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு ஆட்டோ, 17 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் போலீசில் சிக்கியதன் மூலம் கோனணகுண்டே, புட்டேனஹள்ளி, மைகோ லே-அவுட், பேடராயனபுரா ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 20 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.