காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - தேவஸ்தான தலைவர் பேட்டி

காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
காஷ்மீரில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் - தேவஸ்தான தலைவர் பேட்டி
Published on

கன்னியாகுமரி,

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி மற்றும் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி ஆகியோர் கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: -

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தி பஜனை, பகவத்கீதை சொற்பொழிவு மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு விவேகானந்தா கேந்திர நிறுவனம் மேலும் 2 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த இடத்தில் திருமண மண்டபம் மற்றும் கோசாலை மடம் கட்ட திட்டமிட்டுள்ளோம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான 10 ஏக்கர் நிலம் மாநில அரசு வழங்கியுள்ளது. விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தான துணைத் தலைவர்கள் ஆனந்தகுமார் ரெட்டி, அனில் குமார் ரெட்டி, தேவஸ்தான உறுப்பினர்கள் மோகன் ராவ், கார்த்திகேயன், மிஸ்சிதா, ரெங்கா ரெட்டி, கிருஷ்ணமூர்த்தி அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com