

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணைஆணையர் சிவாஜி ஆகியோர் கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கினார்கள். அப்போது திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன், திருத்தணி தாசில்தார் நரசிம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.