

புதுச்சேரி,
புதுச்சேரி கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு (கிழக்கு) மாறன் முன்னிலை வகித்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் (உருளையன்பேட்டை), ஜெய்சங்கர் (முத்தியால்பேட்டை), செந்தில் குமார் (பெரியகடை), அறிவுச்செல்வம் (ஒதியஞ்சாலை) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சிவப்பிரகாசம், பிரபு, புதுவை அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.