

சென்னை,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் செலுத்த இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் இன்று இரவு 8 மணி வரை இயங்கும். நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், https://chennaimetrowater.tn.gov.inஎன்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி அபராத தொகையை தவிர்க்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.