கவனமாக பயணித்தால் உயிர்பலியை தவிர்க்கலாம் - நீதிபதி அறிவுரை

சாலைபாதுகாப்பு வாரவிழாவில் பாதயாத்திரை பக்தர்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் பாதுகாப்பாக பயணித்தால் உயிர்பலியை தவிர்க்கலாம் என்று நீதிபதி தீபா அறிவுரை வழங்கினார்.
கவனமாக பயணித்தால் உயிர்பலியை தவிர்க்கலாம் - நீதிபதி அறிவுரை
Published on

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக சாலைபாதுகாப்பு வாரவிழா நடந்தது.

விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி தீபா தலைமை தாங்கினார். நீதிபதிகள் ராம்கணேஷ், சிந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.

விழாவில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள், ஒளிரும் கை காப்பு, பிஸ்கெட் வழங்கப்பட் டது. மேலும் வாகன ஓட்டுனர் களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம், இருசக்கர வாகனத்தில் இருவருக்குமேல் சென்றால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை பற்றியும் விளக்கி கூறி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

மேலும் அரசு, தனியார் பேருந்துகளில் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரும், விழிப்புணர்வு பிரசார துண்டு பிரசுரங்களும் வழங்கினர். பழனி பாதயாத்திரை பக்தர்களும் வாகனஓட்டிகளும் சாலையில் கவனமாக சென்றால் உயிர் பலியை தவிர்க்கலாம் என்று நீதிபதி தீபா அறிவுரை வழங்கினார்.

இதில் வக்கீல் சங்க செயலாளர் தியாகராஜன், துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, பொருளாளர் ராமசாமி, சட்டப்பணிகள் பணியாளர்கள் அர்ஜனி, கணேஷ்மூர்த்தி, சண்முகவள்ளி, போக்குவரத்து போலீசார் ஜுவானந்தம், முகமது அசாரூதின் உள்பட வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் சங்க முன்னாள் துணை தலைவர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com