

தென்காசி,
கொரோனா காரணமாக பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். தனியார் வாகனங்கள் மற்றும் கார் டிரைவர்களும் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே டிரைவர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டி.என்.ஆல். டிரைவர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை தென்காசி போலீசார் கைது செய்தனர். மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டு மதியம் விடுவிக்கப்பட்டனர்.