

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 193 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலி கருவி, தையல் எந்திரம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட ரூ.58 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.