தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராக் பாஸ்பேட் கையாளுவதில் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராக் பாஸ்பேட் கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ராக் பாஸ்பேட் கையாளுவதில் புதிய சாதனை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம் 9-ல் 24.6.2019 அன்று கப்பலில் இருந்து ஒரே நாளில் 27 ஆயிரம் 546 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான 08.09.2012 அன்று கையாளப்பட்ட 26 ஆயிரத்து 527 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட்டை விட அதிகமாகும்.

உர தயாரிப்பிற்கு மூலப்பொருளான ராக் பாஸ்பேட்டை தூத்துக்குடியில் உள்ள கிரீன் ஸ்டார் உரம் தயாரிக்கும் நிறுவனம் சார்பில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமசந்திரன், துறைமுகத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு தேவையான சிறந்த வசதிகள் மற்றும் தரமான சேவை வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் இந்த சாதனைக்கு காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த தகவல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com