ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பெரம்பலூர்-அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பெரம்பலூர்- அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பரம்பலூரில் நடந்த விழிப்புணாவு ஊர்வலத்தில் பண் போலீசா இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்ற காட்சி.
பரம்பலூரில் நடந்த விழிப்புணாவு ஊர்வலத்தில் பண் போலீசா இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்ற காட்சி.
Published on

பெண் போலீசார்- மகளிர் சுயஉதவிக்குழுவினர்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாவ முன்னிட்டு பெரம்பலூரில், வட்டார போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பெண் போலீசார், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலம் புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு வழியாக சென்று, மீண்டும் பாலக்கரை வந்து, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம் சென்று, காமராஜர் வளைவு வழியாக மீண்டும் ரோவர் வளைவு அருகே வந்து முடிவடைந்தது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பெண் போலீசார், மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பஸ் நிலையம் சென்று, மீண்டும் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தை பசுமை நிறைந்த வளாகமாக மாற்றிடும் நோக்கில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்றுகளை நட்டு கலெக்டர் தாடங்கி வைத்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளா செல்வராசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com