உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை, செய்யாறில் நடக்கிறது.
உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
Published on

திருவண்ணாமலை,

உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேட்டரி ஆப் டெஸ்ட் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை, போளூர், செங்கம் ஆகிய கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளையும் (வியாழக்கிழமை) மற்றும் ஆரணி, செய்யாறு ஆகிய கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 28=ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு அகாடமிகளில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175 233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com