பெங்களூருவில் காதலர் தினத்தில் கோலாகலம்; டி.கே.சிவக்குமார் மகள் திருமணம் நடந்தது

பெங்களூருவில் காதலர் தினமான நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதேபோல் நட்சத்திர ஜோடியான டார்லிங் கிருஷ்ணா - மிலனா நாகராஜ் ஆகியோரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர்.
பெங்களூருவில் காதலர் தினத்தில் கோலாகலம்; டி.கே.சிவக்குமார் மகள் திருமணம் நடந்தது
Published on

நட்சத்திர ஜோடி

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் காதலர் தினமான நேற்று நட்சத்திர ஜோடிகளின் திருமணம் உள்பட பல நல்ல நிகழ்வுகள் நடந்தன. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் டார்லிங் கிருஷ்ணா. இவர் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். கர்நாடக இளம்பெண்களின் கனவுநாயகனாக வலம் வரும் இவர், கன்னட திரைஉலகில் முன்னணி நடிகையான மிலனா நாகராஜ் என்பவரை காதலித்து வந்தார். மிலனா நாகராஜும், நடிகர் கிருஷ்ணாவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் இருவரும் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி காதலர் தினமான நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் திருமண

மண்டபத்தில் வைத்து இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட ஏராளமான திரைத்துறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

டி.கே.சிவக்குமாரின் மகள் திருமணம்

இதேபோல், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களின் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த கபே காபிடே உரிமையாளர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்தியா என்பவருக்கும் காதலர் தினமான நேற்று பெங்களூருவில் வைத்து இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் கலந்து கொண்டு

மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com