வானவில் : சிறிய சைஸ் புரொஜெக்டர்

என்டெக் நிறுவனம் புதிய வகை பன்முக செயல்பாடுகளைக் கொண்ட சிறிய அளவிலான புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
வானவில் : சிறிய சைஸ் புரொஜெக்டர்
Published on

வட்ட வடிவிலான இந்த புரொஜெக்டர் 360 டிகிரி சுழலக்கூடியது. இதனால் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் எளிதில் திருப்பலாம். இதில் ஸ்பீக்கர் உள்ளதால் இனிய இசையைக் கேட்டு மகிழலாம். இது 4 கே ரெசல்யூஷன் இருப்பதால் படங்கள் தெளிவாகத் தெரியும். இது புளூடூத் இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. வை-பை இணைப்பின் மூலமாகவும் இதை செயல்படுத்தலாம். இதில் படங்களை ஸ்டோரேஜ் செய்யும் வசதியும் உள்ளது. வெளியூருக்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கேயும் இதன் மூலம் விருப்பமான காட்சிகளை காணலாம்.

உங்களது ஸ்மார்ட்போன் மூலம் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து இதை எளிதில் இயக்கலாம். வீட்டில் படுத்தபடியே மேற்கூரை மீது திரைப்படங்களையும் இதில் மூலம் பார்த்து மகிழலாம். இதன் விலை 475 டாலர் ஆகும். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி பேட்டரியைக் கொண்டது. அடுத்தது ஸ்பீக்கர், மேல் உள்ள பகுதியில் புரொஜெக்டர் இருக்கும். வட்ட வடிவில் அமைந்துள்ள இந்த புரொஜெக்டரை எளிதில் கையில் எடுத்துச் செல்லலாம்.

இதை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது. இதில் மொத்தம் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3வாட் திறன் கொண்டவை. இவை இனிய இசையை வழங்க உதவும். ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் இணைப்பு உள்ளது. இதனால் கேபிள் இணைப்பு மூலமாகவும் புரொஜெக்டர் வழியாக படங்களை திரையிட முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com